= Indian Linux Users Group - Chennai = 1. [[http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc|A 10 years old English mailing list with more than 2000 members ]] 1. [[http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil|A mailing list in Tamil to cater to the needs of people of Tamil Nadu where Chennai is located]] 1. [[http://www.ilugc.in|Website]] 1. Monthly meet with talks and discussions 1. Seminars and introductory talks on FOSS to colleges in the region by ilugc members 1. Distribution and exchange of FOSS software CDs ---- Note : Tamil Translation of text on the front page of http://softwarefreedomday.org/ = மென்பொருள் சுதந்திர தினம் என்றால் என்ன? = '''கட்டற்ற மென்பொருட்களை கொண்டாடும் விதமாக உலகமெங்கும் மென்பொருள் சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.''' இந்தக் கொண்டாட்டங்களின் மூலம் உலகெங்கிலும் உள்ள பொதுமக்களுக்கு கட்டற்ற மென்பொருட்களை கல்விக் கூடங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீட்டிலும், அலுவலகத்திலும் எல்லா இடத்திலும் பயன்படுத்துவதன் ஆதாயங்களை எடுத்துச் சொல்கிறோம்! இலாபநோக்கற்ற நிறுவனமான சாஃப்ட்வேர் ஃப்ரீடம் இன்டர்நேஷனல், மென்பொருள் சுதந்திர தினத்தை உலக அளவில் ஒருங்கிணைத்து, தேவையான உதவிகளை அளித்து, எல்லாக் குழுவினருக்கும் ஒரு மையமாக செயல்படுகிறது. தன்னார்வல குழுக்கள் தத்தமது சமூகங்களின் தேவைக்கேற்ப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். == நோக்கமும் குறிக்கோள்களும் == === நோக்கம் === '''எல்லா மக்களும் சுதந்திரமாக ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளவும், புதிய ஆக்கங்களை படைக்கவும், படைப்புகளை பகிர்ந்து கொள்ளவும் ஏதுவான வெளிப்படையான எல்லோரையும் அணைத்துச் செல்லும் கட்டிக் காக்கக் கூடிய தகவல் தொழில் நுட்ப சூழலை உருவாக்குவது. ''' === குறிக்கோள்கள் === * மென்பொருள் சுதந்திரத்தையும் அதற்குக் காரணமானவர்களையும் கொண்டாடுவது * மென்பொருள் சுதந்திரம் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்கி, கட்டற்ற மென்பொருட்களையும், பொதுவான தகுதரங்களையும் பயன்படுத்த மக்களை ஊக்குவித்தல். * எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய எல்லோரும் பங்கேற்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்துவது * உருவாகி வரும் தகவல் சார்ந்த சமூகத்தில் பொறுப்புகளையும் கடமைகளையும் பற்றிய விவாதங்களை ஊக்குவித்தல் * இதே நோக்கத்தைக் கொண்டுள்ள நிறுவனங்களையும் தனிநபர்களையும் சேர்த்து அணைத்து செயல்படுதல். * நடைமுறை சார்ந்த, வெளிப்படையான பொறுப்பான நிறுவனமாக இயங்குதல் ---- CategoryTeam2012